வாழ்க்கையில் வெற்றி பெற வழிகள்
சில அவசியமான கதைகள்::
இந்த பகுதியில் இடம் பெற்றுள்ள கதைகள் அனைத்தும் படிக்கும் போது பயன்படுகிறதோ இல்லையோ ஆனால் வாழ்க்கை பயணத்தில் இருக்கும் போது மிகவும் பயன்னுள்ளதாக இருக்கும். அதாவது தடுப்பூசி போட்டுகொளவதால் அந்த நேரத்தில் நோய் இல்லை என்றாலும் நோய் வந்தவுடன் அந்த மருந்தானது எப்படி செயல்பட ஆரம்பித்து நோய் கிருமியை அழிக்கிறதோ அது போல் இப்பகுதில் உள்ள கதைகள் பல சூழ்நிலைகளில் உங்களை காப்பாற்றும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ள வேண்டாம்.
முயற்சி செய்கின்றவர்களுக்கு தான் இறைவன் நினைத்ததை அடையும் வாய்ப்பை கொடுக்கிறான். மற்றவர்களுக்கு நினைத்ததை நினைத்தபடியே இருக்கும்படி செய்கிறான். ஆகவே வெற்றியோ தோல்வியோ முயற்சி செய்யுங்கள்.
மற்றவர்களின் விமர்சனங்களுக்கு பதில் யோசிக்க வேண்டாம்
புத்தர் தன் பிரயாணத்தின் போது ஒரு கிராமத்தை வந்தடைந்தார். அங்கிருப்பவர்கள் பெரும்பாலும் மத போதகர்கள். புத்தரை, அவருடைய போதனைகளை வெறுப்பவர்கள்.எனவே ஆனந்தா என்ற அவருடைய பிரதான சீடர் அந்த வழியாக செல்ல வேண்டாம் என்றார். ஆனால் புத்தர் அதை மறுத்து அந்த வழியாக சென்றார். அவர் ஊருக்குள் நுழைந்ததுமே அந்த மதவாதிகள் அவரை சூழ்ந்து கொண்டு கண்டபடி திட்ட ஆரம்பித்தனர். ஆனால் புத்தரோ எவ்வித சலனமும் இன்றி அந்த இடத்தை விட்டுச் சென்றார்.அந்த ஊரை கடந்ததும் இளைப்பாற ஓரிடத்தில் தங்கினர். ஆனந்தாவால் பொறுக்க
முடியவில்லை “குருவே ! அவர்கள் உங்களை எந்த அளவு கேவலமாக பேசி விட்டனர்,நீங்கள் அவர்களோடு சண்டையிட வேண்டாம் குறைந்த பட்சம் மறுப்புத் தெரிவித்து ஏதாவது சொல்லி விட்டு வந்திருக்கலாமே”என்றார்.புத்தர் அமைதியாக தான் பிச்சை எடுக்கும் திருவோட்டைக் காட்டி
“ஆனந்தா! இது யாருடையது?” என்றுகேட்டார்.
“ இது உங்களுடையது”
“இல்லை இது உன்னுடையது ,இதை நான் உனக்கு கொடுத்து விட்டேன்” என்றார் புத்தர். சிறிது நேரம் சென்றதும் மீண்டும்
”ஆனந்தா!இது யாருடையது ?” என்று கேட்டார்.
“இது என்னுடையது சுவாமி!”
“எப்படி ? இது என்னுடையது என்று சொன்னாய்?” “சுவாமி!இதை நீங்கள்தான் எனக்கு கொடுத்தீர்கள்.நான் அதை ஏற்றுக்
கொண்டதால் இது என்னுடையதாயிற்று”என்றார். “ஆம் , நான் கொடுத்ததை நீ ஏற்றுக் கொண்டதால் அது உன்னுடையதாயிற்று, ஒருவேளை நான் கொடுத்ததை நீ ஏற்க விட்டால் அது யாருடையதாய் இருந்திருக்கும். அது தங்களுடையதாய் இருந்திருக்கும், சுவாமி ! என்றான் அந்த சீடன்.
அவர்கள் என்னைக் குறித்துச் சொன்னவைகளை நான் ஏற்றுக் கொள்ளவில்லை எனவே அவை என்னுடையதல்ல”என்றார்.(அந்த திட்டுகளை புத்தர் ஏற்காததால் அவைகளும் அதை திட்டியவர்களுக்கே!).
இதிலிருந்து நாம் அறிவது...
நாம் சான்றோற்கள் காட்டிய வழியில் செல்லும் போது மற்றவர்களின் விமர்சனங்களை காது கொடுத்து கேட்க வேண்டாம். இக்காலத்தில் புத்தருக்கு இலட்சத்திற்கும் அதிகமான கோவில்கள் கட்டி மக்கள் அவரை வழிபடுகின்றனர். அப்படிபட்டவருக்கே அந்த நிலை என்றால் நாம் எங்கனம் ஆகையால் நாம் செல்லுகிற வழியில் கவனத்தை செலுத்தி வெற்றி பெறுவோமாக!!! மற்றவர்களின் விமர்சனங்களுக்கு பதில் யோசிக்க வேண்டாம்.
ஆபிரஹாம் லிங்கன்
,தன மகனுக்கு என்ன கற்பிக்கப் படவேண்டும் என்று அவனது ஆசிரியருக்கு
விடுத்த வேண்டுகோள் கடிதம்;
எவரும் முற்றிலும் நேர்மையானவர் அல்லர்;உண்மையானவர் அல்லர்--இதை
அவனுக்குச் சொல்லுங்கள். தோல்வியை ஏற்றுக்
கொள்ளவும் வெற்றியைக் கொண்டாடவும் கற்றுக்
கொடுங்கள். பெருமையிலிருந்து அவன் விலகியே
இருக்கட்டும்.மனம் விட்டுச் சிரிக்கும் இரகசியம்
அவனுக்குத் தெரியட்டும்.
டம்பப் பேச்சுக்கு அடிமை ஆவது எளிது என்பதை அவன் சிறு வயதிலேயே
அறியட்டும்.புத்தகங்களின் விரோதங்களை அவனுக்கு
உணர்த்துங்கள்.
இயற்கை விநோதங்களை அலசி ஆராய அவனுக்கு நேரம்
கொடுங்கள். பிறரை ஏமாற்றுவதை விட ,தோற்பது
கண்ணியமானது என்பதனைக் கற்றுக் கொடுங்கள். எத்தனை
பேர் கூடி 'தவறு'என்றாலும்,சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச்
செய்யுங்கள். மென்மையானவர்களிடம்மெ
ன்மையாகவும்,உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடக்கக் கற்றுக்
கொடுங்கள். துன்பத்தில் அவன்
சிரிக்கட்டும்.அத்துடன் கண்ணீர் விடுவது அவமானம் இல்லை என்பதை
உணர்த்துங்கள். குற்றங்குறை கூறுபவர்களை அவன்
அலட்சியப் படுத்தட்டும்.அத்துடன் அளவுக்கு அதிக இனிமையுடன்
பேசுபவரிடம் எச்சரிக்கையாகவும் இருக்கச் சொல்லிக்
கொடுங்கள். உரக்கக் கத்தும் கூட்டத்திற்கு அவன்
செவி சாயாமல் இருக்கட்டும்.தன மனதுக்கு 'சரி' என்று தோன்றுவதை
துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப்
பழக்குங்கள். அவனை மென்மையாக நடத்துங்கள்.அதற்காகக்
கட்டித் தழுவாதீர்கள்.
எப்போதும் எதிலும் ஆவல் மிக்கவனாக இருக்க அவனுக்குத் தைரியம்
ஊட்டுங்கள்.தொடர்ந்து தைரியசாலியாக இருக்க விடாமுயற்சியைக் கற்றுக்
கொடுங்கள். தன்னம்பிக்கையில் அசைக்க முடியாத
நம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள்.அப்போது அவன் மனித சமுதாயம்,அசைக்க
முடியாத நம்பிக்கை கொண்டவனாக இருப்பான்.
இவையெல்லாம் மிகப்பெரிய
,கடினமான நடைமுறைகள்தான்.ஆனால் உங்களால் முடிந்ததைச்
செய்யுங்கள்.ஏனெனில் இனிமையான என் மகன் மிகவும் சிறியவன்.
சொல் புத்தியை விட சுய புத்தி முக்கியமானது
ஒருமுறை ஒரு விவசாயி ஒருவர் தன் கழுதையை விற்று விட தீர்மானித்தார். அருகிலுள்ள கிராமத்திற்கு தன் கழுதையையும் மகனையும் அழைத்து சென்றார். அவர்கள் இருவரும் கழுதையை இழுத்துக்கொண்டு நடந்து சென்றனர். செல்லும்போது வழிப்போக்கன் ஒருவன், “ கழுதை சும்மா தானே போகுது யாராவது ஒருவர் அதன் மீது ஏறி உட்கார்ந்து செல்லலாமே ” என்றான். அதுவும் சரியென்று தந்தை மகனை கழுதையின் முதுகில் ஏற்றி விட்டார். சிறிது தூரம் சென்றதும் எதிரே வந்த ஒருவர் “ ஏனப்பா வயதான தந்தையை இப்படி நடக்க வைத்துவிட்டு நீ கழுதையின் மேல் செல்வது நியாம்தானா? ” என விவசாயின் மகனை பார்த்து கேட்டார். உடனே மகன் கீழே இறங்கி கொண்டு வயதான தந்தையை கழுதையின் மீது ஏறி அமர சொன்னான். அவரும் அவ்வாறே செய்தார். இப்படியே கொஞ்சம் தூரம் சென்ற பிறகு, இன்னொறுவர் தந்தையை பார்த்து “ ஏனய்யா இப்படி பச்சை பிள்ளையை நடக்க விட்டுட்டு நீ கழுதை மேல் போலாமா ? ” என கடிந்து கொண்டார்.
தந்தையும் மகனும் இப்படி ஆளாளுக்கு ஒன்றை சொல்கிறார்களே என நினைத்து, பல முறை யோசித்து இருவரும் கழுதையின் மேல் ஏறி உட்கார்ந்து பயணப்பட்டார்கள். சிறிது தூரம் சென்றதும், இரண்டு பேரும் இவ்வாறாக அமர்ந்து செல்வதை பார்த்த சிலர், “ அட கடவுளே, பாருமையா இந்த கொடுமையை !!! இவர்களுக்கு ஈவு இரக்கமே இல்லையா, வாயில்லாதா இந்த ஜீவனை இப்படியா கொடுமைபடுத்துவது ? ” என கோபபட்டார்கள். அவர்களின் பேச்சை கேட்ட மறுகனமே அந்த விவசாயியும் மகனும் கீழே குதித்தார்கள்.
மனம் குழம்பி போன மகனும் தந்தையும், கழுதையை தூக்கி கொண்டு செல்வது தான் சிறந்தது என ஒரு முடிவுக்கு வந்தார்கள். மிகவும் சிரமபட்டு கழுதையின் கால்களை கயிற்றால் கட்டிய பிறகு, ஒரு கம்பில் அதை கட்டி தோளில் தூக்கி கொண்டு கம்பீரமாக நடக்க ஆரம்பித்தனர். கிராமத்தை அடைவதற்கு முன்னால் ஆற்றின் குறுக்காக உள்ள ஒரு பாலத்தை கடக்க வேண்டியிருந்தது. அவ்வாறாக அவர்கள் கழுதையை தோளில் துக்கி கொண்டு பாலத்தில் செல்வதை பார்த்த, ஆற்றில் குழித்து கொண்டிருந்த சிறுவர்கள் கைகொட்டி சிரிக்க ஆரம்பித்தார்கள். பலத்த சத்தத்தை கேட்ட கழுதை துள்ளி குதிக்க ஆரம்பித்தது. அதை தூக்கி கொண்டு வந்த தந்தை மற்றும் மகனின் பிடியை அது நழுவி ஆற்றில் வீழ்ந்தது. கால்கள் கட்டபட்டிருந்ததால் அந்த கழுதையால் நீந்த முடியாமல் ஆற்றில் மூழ்கி இறந்து போனது. இப்படி சுயமாக முடிவெடுக்க முடியாமல் அடுத்தவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டதால் தங்களுக்கு அடிபட்டதோடு கழுதையும் இறக்க நேரிட்டதை நினைத்து வருந்தியபடி சென்றனர்.
இதிலிருந்து நாம் அறிவது.....
ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு கருத்து எல்லோரையும் திருப்திபடுத்த முடியாது. சொல் புத்தியை விட சுய புத்தி முக்கியமானது.
இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது.
எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும் தாய்நாட்டுப் படைத் தளபதிக்கு போரை இழக்கமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை. ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை கிஞ்சித்தும் இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர்.
என்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்களில்லாமல் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்?
கடைசி நாள் சண்டை. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் கண்டார்கள்.
உடனே தளபதி வீரர்களை அழைத்து, “சரி வீரர்களே… நாம் ஒரு முடிவுக்கு வருவோம். இதோ இந்தக் கோயிலுக்கு முன் ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுகிறேன். அதில் தலை விழுந்தால் வெற்றி நமக்கே. பூ விழுந்தால் நாம் தோற்பதாக அர்த்தம். இப்படியே திரும்பிவிடுவோம்…வெற்றியா தோல்வியா.. நமக்கு மேல் உள்ள சக்தி தீர்மானிக்கட்டும்… சரியா?”
“ஆ.. நல்ல யோசனை… அப்படியே செய்வோம்…”
நாணயத்தைச் சுண்டினான் தளபதி. காற்றில் மிதந்து, விர்ரென்று சுழன்று தரையில் விழுந்தது நாணயம்.
தலை…!
வீரர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். வெற்றி வெற்றி என்று எக்காளமிட்டபடி போர்க்களம் நோக்கி ஓடினர். வெகு வேகமாக சண்டையிட்டனர் எதிரி நாட்டவர்களோடு.
அட.. என்ன ஆச்சர்யம். அந்த சிறிய படை, எதிரி நாட்டின் பெரும் படையை வீழ்த்திவிட்டது!
துணைத் தளபதி வந்தான். ‘நாம் வென்றுவிட்டோம்… கடவுள் தீர்ப்பை மாற்ற முடியாதல்லவா…” என்றான் உற்சாகத்துடன்.
“ஆமாம்… உண்மைதான்” என்றபடி அந்த நாணயத்தை துணைத் தளபதியிடம் கொடுத்தான் தளபதி.
நாணயத்தின் இரு பக்கங்களிலும் தலை!.
ஒர் ஊரில் பெரிய கோடீஸ்வரன் இருந்தான். அவனிடம் இல்லாத விஷயங்களே இல்லை. அத்தனையும் அளவுக்கு அதிகமாக கொட்டிக் கிடந்தன. ஆனால் சந்தோஷமும் நிம்மதியும்தான் இல்ல. சரி, உள்ளூர்லதான் சந்தோஷம் கிடைக்கல. வெளியூர், விதவிதமான நாடுகளுக்குப் போனா கிடைக்குமான்னு, தேடித் தேடிப் போனான்… ம்ஹூம் நிம்மதி கிடைச்சபாடில்ல. மனசுக்குள்ள எப்பவும் பரபரப்பு… எந்த ஊருக்குப் போனாலும் அடுத்த நாளே, வீட்டுல என்ன ஆச்சோங்கிற கவலை. இனி துறவறத்தில் இறங்கி சந்நியாசியா போயிடலாம். அமைதி கிடைக்கும்னு யாரோ சொல்ல, அவனும் துறவறத்தில் இறங்கினான்.
உடனே அவன் தன் வீட்டில இருந்த தங்கம், வைரம், வைடூரியம், எக்கச்சக்க பணம் எல்லாத்தையும் ஒரு மூட்டையா கட்டி எடுத்துக்கிட்டு ஒரு துறவியைப் பார்க்கப் போனான். அப்போது துறவி ஒருத்தரு மரத்தடியில உட்கார்ந்துட்டிருந்தார். அதைப் பார்த்த அந்த கோடீஸ்வரன், அந்த மூட்டையை துறவியின் காலடில வச்சிட்டு, “குருவே! இதோ என்னோட மொத்த சொத்தும் இதுல இருக்கு. இனி இவை எதுவும் எனக்கு வேணாம். எனக்கு அமைதியும், சந்தோஷமும்தான் வேணும்… அடுத்து என்ன செய்யணும் சொல்லுங்க…,” சொல்லி கும்பிட்டான்.
எல்லாத்தையும் கேட்டுக்கிட்ட துறவி, உடனே அந்த மூட்டையை வேகமா பிரிச்சுப் பாத்தார்.
அதில் கண்ணை கவரும் தங்கமும் வைர வைடூரியங்களும் கட்டுக்கட்டா பணமும்… துறவி சடார்னு, அந்த மூட்டையை கட்டி தலையில் வைத்துக் கொண்டு ஒரே ஓட்டமா ஓட ஆரம்பிச்சார். அதைப் பாத்ததும் கோடீஸ்வரனுக்கு இன்னும் பேரதிர்ச்சி. ‘அடடா.. இவன் பஞ்சத்துக்காக காவி கட்டிய போலி சாமியார் போலருக்கே’ன்னு பதறிட்டான். கோபம் கோபமாக வந்தது. உடனே துறவியை துறத்த ஆரம்பிச்சிட்டான் நம்மாளு!
துறவியின் ஓட்டத்துக்கு செல்வந்தனால் ஈடு கொடுக்க முடியல. துறவி சந்து பொந்தெல்லால் சர்வ சாதாரணமா ஓடறார். தாவிக் குதிக்கிறார்… ம்ஹூம்.. பணக்காரனால ஒண்ணுமே பண்ண முடியல. ஆனா துறவி எல்லா தெருக்களையும் ஓடி முடித்து கடைசியில் அதே மரத்தடிக்கு வந்து நின்னுட்டார்! அந்த கோடீஸ்வரனைப் பாத்தார். “என்ன கண்ணா பயந்துட்டியா… இந்தா உன் சொத்து மூட்டை… நீயே வச்சுக்க…” என்று திருப்பிக் கொடுத்தார்.
சொத்து மூட்டை கையில் வந்ததும் கோடீஸ்வரன் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்ல. ஒரே குதூகலமாயிட்டான். முகமெல்லாம் சிரிப்பு தாண்டவமாடுது.
இப்போது அந்த துறவி கேட்டார்… “என்னப்பா… புதுசா சிரிக்கிற… இதுக்கு முன்னாடி இந்த செல்வமெல்லாம் எங்கே இருந்துச்சி… உங்கிட்டதானே… ஆனால் அப்ப உன்கிட்ட மகிழ்ச்சி இல்ல… இப்பவும் நீ வச்சிருக்கிறது அதே சொத்துதான். ஆனா சந்தோஷமும் நிம்மதியும் உன் முகத்தில் தெரியுது…!” என்று கூறிவிட்டு, சட்டென்று திரும்பிப் பார்க்காமல் நடந்தார்! எல்லாம் புரிந்த தெளிவோடு வீடு திரும்பினான் செல்வந்தன்!
Vellalorenadu 2012- 2017 All Rights are reserved