வெள்ளலூர் நாட்டின் வரலாறு:


        ----->   வெள்ளலூர் நாடு என்பது ஏறத்தாழ ஐம்பதுக்கும் அதிகமான சிறிய ஊர்களின் பகுதியாகும். இந்த ஐம்பது ஊர்களும் சுமார் ஐந்து மாகாணங்களுக்குள் அடங்கியிருக்கிறது.அவையாவன.

                             1.வெள்ளலூர்,

                             2. உறங்கான்பட்டி,

                             3. அம்பலகாரன்பட்டி

                             4. குறிச்சிபட்டி

                             5. மலைப்பட்டி[மலம்பட்டி].

 வெள்ளலூர் நாட்டில் இரண்டு மிக பெரிய காவல் தெய்வங்கள் உள்ளன அவையாவன, அருள்மிகு வல்லடிகாரர் கோவில் , ஏழைகாத்த அம்மன் கோவில். இந்த தெய்வங்களுக்கு சிறப்பு திருவிழாக்கள் நடைபெறும்


ஸ்ரீ அருள்மிகு வல்லடிகாரர் கோவில்:


                  => இந்த கோவிலில் தான் மண் குதிரை புல் தின்றதென்றும் அதனை ஏளனம் செய்த ஆங்கிலேயன் அங்கேயே[ வெள்ள கண்மாய் அருகே ] இறந்துவிட்டதாகவும் ஐதீகம் இன்னமும் இருக்கிறது., அதனால் தான் வெள்ளலூர் நாட்டில் வசிக்கும் மக்கள் குதிரையில் அமர்ந்து செல்வதில்லை.

Image description

ஸ்ரீ அருள்மிகு வல்லடிகாரர் கோவில்

         => இந்த கோவில் அம்பலகாரன்பட்டி  மாகாணத்தில் உள்ள அம்பலகாரன்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. 


            => இந்த கோவில் நாயத்தான்பட்டி விளக்கிலிருந்து  1 .5   கிலோமீட்டர் தொலைவில் மேற்கு நோக்கிய பாதையில் உள்ளது. இந்த கோவிலுக்கான விழா மாசி மாத இறுதியிலோ அல்லது பங்குனி மாத தொடக்கத்திலோ வரும்.

                 * பொதுவாக திருவிழா ஆரம்பிக்கும் 15 நாட்களுக்கு முன்பே வெள்ளலூர் நாட்டு மக்கள் விரதம் இருக்க ஆரம்பித்துவிடுவார்கள். இந்த நிகழ்வுக்கு காப்புகட்டுதல் என்று பொருள். காப்புகட்டிய அன்றைய தினத்திலிருந்து 15 நாட்களுக்கு இங்கு வாழும் மக்கள் மட்டுமல்லாமல் இந்த பகுதியை சேர்ந்த உலகம் முழுவதிலும் வாழும் மக்களும்  எந்த விதமான அசைவ உணவையும் எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.  இந்த பகுதியில் உள்ள உணவகங்களும் சைவ உணவையே தயார் செய்யும்.

                   * அதே போன்று பச்சை மரங்களை யாரும் வெட்டமாட்டார்கள், இந்த 15  நாட்களும் ஒவ்வொரு ஊரிலும் வைந்தான் அடிப்பார்கள் [ அதாவது  ஒவ்வொரு ஊரில் வாழும் மக்கள் பொது மந்தை கோவிலில் கூடி நின்று கை அல்லது கம்புகளை கொண்டு விளையாடும் ஒரு வகையான விளையாட்டு. ஒற்றுமையை வழியுறுத்தி இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது.]

       

 ஸ்ரீ அருள்மிகு ஏழைகாத்த அம்மன் கோவில்


Image description

ஸ்ரீ அருள்மிகு ஏழைகாத்த அம்மன் கோவில்:


        => இந்த கோவில் குறிச்சிபட்டி மாகாணத்தில் உள்ள கோவில்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.  


       => நாயத்தான்பட்டி  விளக்கிலிருந்து
3 .5 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு நோக்கிய பாதையில் உள்ளது. இந்த கோவிலுக்கான விழா புரட்டாசி மாதத்தில் வரும்.

               இந்த கோவில் திருவிழா புரட்டாசி மாத தொடக்கத்தில் நடத்தப்படும். இந்த கோவில் திருவிழாவிற்கும் 15 நாட்கள் முன்னதாக காப்புகாட்டி விடுவார்கள். அந்த 15 நாட்களும் வெள்ளலூர் நாடு ழுவதும் சைவ உணவையே உண்பார்கள். இந்த கோவில் சிறப்பு என்னவென்றால்  மது எடுத்தல், பிரிசுற்றுதல் ஆகியன.


  ஒவ்வொரு தலா மாகாணங்களுக்கு பத்து அல்லது அதற்கு மேற்ப்பட்ட சிறிய ஊர்கள் உள்ளன, அவையாவன.


  முதலாவதாக வெள்ளலூர் மாகாணம்:
                        வெள்ளலூர் மாகாணத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ஊர்களின் விபரம் பின்வருமாறு:
                                           1 . வெள்ளலூர்
                                           2 . கட்டசோலைபட்டி
                                           3 . இடையகோவில்பட்டி
                                           4 . ம.ஒத்தப்பட்டி
                                           5 . மட்டங்கிபட்டி
                                           6 . கண்ணபுரம்
                                           7 . இடையவலசை
                                           8 . வெள்ளநாயகம்பட்டி
                                          10 . ஒத்தப்பட்டி
                                          11 . மேலவலசை
  

இரண்டவதாக உறங்கான்பட்டி மாகாணம்:
                          உறங்கான்பட்டி மாகாணத்தில் உள்ள ஊர்கள் பின்வருமாறு.


                                          1 . உறங்கான்பட்டி

                                          2 . புலிமலைபட்டி
                                          3 . கல்லம்பட்டி
                                          4 .குப்பச்சிபட்டி
                                          5 . அய்யமுத்தாம்பட்டி
                                          6 . கொட்டாணிபட்டி
                                          7 . கொட்டாணி அழக்சிபட்டி
                                          8 . சூரத்துபட்டி
                                         10 . உ.புதுபட்டி
                                         11 . தர்மாசனபட்டி


முன்றாவதாக அம்பலகாரன்பட்டி மாகாணம்:
                          அம்பலகாரன்பட்டி மாகாணத்தில் உள்ள ஊர்களின் விபரம் பின்வருமாறு:
                                         1 . அம்பலகாரன்பட்டி
                                         2 . நாயத்தான்பட்டி
                                         3 . வல்லவன்காலனி
                                         4 . கோட்டநத்தம்பட்டி
                                         5 .அ.புதுபட்டி
                                         6 . முருகன்பட்டி
                                         7 . பழையூர்பட்டி
                                         8 . சுப்பிரமணியபுரம்
                                        9 . சின்ன ஒக்குபட்டி
                                        10 . கட்டகாளைபட்டி
                                        11 . ஏழைகாத்த அம்மன் நகர்.
 

நான்காவதாக குறிச்சிபட்டி மாகாணம்:                       

                         குறிச்சிபட்டி மாகாணத்தில் உள்ள ஊர்களின் விபரம் பின்வருமாறு:
                                       1 . குறிச்சிபட்டி
                                       2 . முத்தம்பட்டி
                                       3 . கள்ளராதினிபட்டி
                                       4 . கூலிபட்டி
                                       5 . கோவில்பட்டி
                                       6 . கோ.ஒத்தப்பட்டி
                                       7 . ஆலம்பட்டி
                                       8 . கம்மாய்பட்டி
                                       9 . உச்சிரிச்சான்பட்டி

 

ஐந்தாவதாக மலைப்பட்டி [ மலம்பட்டி ] மாகாணம்:
                        மலைப்பட்டி மாகாணத்தில் அடங்கியுள்ள சிறிய ஊர்களின் விபரம் பின்வருமாறு:
                                       1 . மலைப்பட்டி
                                       2 . சோனைபட்டி
                                       3 . அழக்சிபட்டி
                                       4 . தேவன்கோட்டை
                                       5 . மேட்டுப்பட்டி
                                       6 . கன்னிமார்பட்டி
                                       7 . தேவன்பெருமாள்பட்டி
                                       8 . பெரிய ஒக்குபட்டி
                                       9 . மாணிக்கம்பட்டி
                                     10 . ஆவாரம்பட்டி
                                     11 . கூட்டுறவுபட்டி
                                     12 . சிவல்பட்டி
                                     13 . உசிலம்பட்டி
                                     14 . கண்டாங்கிபட்டி
                                     15 .முனியாண்டிபட்டி
                                     16 . சாணிபட்டி

ஊர்களின் பெயர்கள் விடுப்பட்டிருந்தாலோ அல்லது மாற்று மாகாணத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டதாக தங்கள் அறிந்தால் எங்களுக்கு சரியான தகவல்களை கொடுக்கும்படி கேட்டுகொள்கின்றோம் .

        வெள்ளலூர் நாட்டின் வரலாறு தெரிந்தவர்கள் மின்னஞ்சல் மூலமாக எங்களை தொடர்பு கொண்டு தகவல்களை எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

சமுதாய வரலாறு:

           வெள்ளலூர் நாட்டில் இந்து மத மக்கள் வாழ்கின்றனர். இங்கு அனைத்து விதமான [ ஓரளவு ] இந்து மதத்தின் உட்பிரிவு வகையான கள்ளர் [ பெரும்பான்மையோர் ], செட்டியார், வேளாளர், பனிக்கர், யாதவ், நாடார், மூப்பனார் , பறையர், சக்கிலியன் ஆகிய குலங்களின் மக்கள் வாழ்கின்றனர்[ இன்னும் இருக்கலாம், எங்களுக்கு தெரியப்படுத்தவும்.]. முதலாவதாக கள்ளர் சமுதாயம் தோன்றிய வரலாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Image description

கள்ளர்:

               களவர்(விளக்கம்):    ஆதிகாலம் முதல் நம்குலமுன்னோர்கள் அனைவரும்போர்க்களத்தொழிலையே குலத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்ததால், கி.மு.ஆறாம் நூற்றாண்டுக்குமுன் அக்குலத்தொழில் பெயராலேயே களவர் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டனர். களவர் என்றால் களம் காண்பவர் என்று பொருள். இதனைப்பற்றி, மயிலை சீனி வெங்கடசாமி அவர்கள் எழுதியுள்ளது வருமாறு: களவர் தமிழ்ச்சொல். களம் என்னும் தமிழ்ச்சொல்லிலிருந்து பெறப்படும். களம் என்றால் போர்க்களம். களவர் என்பதற்கு களம் காண்பவர் அல்லது போர்க்களம் சார்ந்த மக்கள் என்று பொருள். இவ்வாறு அவர் எழுதியுள்ளார். தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்ற நூல் எழுதிய எட்கர் தர்சன் என்ற ஆங்கிலேய வரலாற்று ஆசிரியரும் கள்ளர்,மறவர், அகமுடையோர் என்போர் போர்க்களம் சார்ந்த மக்கள் என்பதை தெளிவாக எழுதியுள்ளார். பிற்காலத்தில், களவர் என்ற வார்த்தைக்கு புள்ளி வைத்து எழுதும்போது கள்வர் என்றும்,கள்வர் என்ற வார்த்தையே தற்காலத்தில் கள்ளர் என்றும் மரூவி வந்துள்ளது. தஞ்சை பெருவுடையார் கோயிலில் உள்ள மாமன்னர் இராஜராஜசோழனின் கல்வெட்டில் “தாய்மண் காக்க உதிரம் கொட்டிய கள்ளர்குல மறவர்களுக்கு உதிரப்பற்று என்னும் வரிநீக்கிய நிலங்களை கொடையாக அளித்து போற்றியுள்ளது” பொறித்துவைக்கப்பட்டுள்ளது. இதை அறியாத அரைவேக்காட்டு கத்துக்குட்டி வரலாற்று ஆசிரியர்கள், கள்ளர் என்பதற்கு திருடர் என்று பொருள் கண்டுள்ளனர்., மேலும், கள்ளர்கள் பலப்பல போர்க்களங்கள் கண்டு ஏராளமான விருதுப்பெயர்களை சோழமன்னர்களிடமிருந்து பெற்றுள்ளனர் என்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளன. எனவே, கள்ளர்களை விருதுகள் பலகூறு வீரைமுடையான் என்று மிராஸ்ரைட் கல்வெட்டு கூறுவதை காண்க:“தொண்டைமண்டல வரிசை மூவாறு குடிமக்கள் சுருதிநாள் முதலாகவே துங்கமிகு நாவிதன், குயவன்,வண்ணான், ஓலை சொன்னபடி எழுதும் ஒச்சன், கண்டகம் மாளர்வகை ஐவர், வாணியர் மூவர், கந்தமலர் மாலைகாரர் கலைமீது சரடோட்டும் பாணன், தலைக்கடைக் காவல்புரி பள்ளி,வலையன், பண்டுமுதல் ஊரான் மறிக்கும் இடையன், விருது பலகூறு வீரமுடையான் பதினெண் குடிமக்கள் அனைவரும்…………………

     ”பழங்காலத்தில், போர்முரசு கொட்டியவுடன், நம் முன்னோர்கள் அனைத்துவேலைகளையும் புறம்தள்ளிவைத்துவிட்டு, அவசரம் அவசரமாக போர்க்கோலம் பூண்டு, இடது தோளில் வில்லை எடுத்துமாட்டிக்கொண்டு, வலது தோளில் முதுகுப்பக்கம் கற்றை கற்றையாக எண்ணற்ற அம்புகளைப்பிணைத்திருக்கும் அம்பறாத்தூளியை எடுத்துக்கட்டிக்கொண்டு, இடது இடையில் போர்வாளுடன கூடிய உறையை எடுத்து இறுகக்கட்டிக்கொண்டு, வலதுகையில் நெடிய ஈட்டியையும் இடதுகையில் கேடயத்தையும் எடுத்துக்கொண்டு போர்க்களம் நோக்கி ஓடி, எதிரி நாட்டுப்போர்ப்படையின்மீது புலிபோல் பாய்ந்து உயிரைப்பற்றிக்கவலைப்படாமல் மதம்கொண்ட யானையைப்போல் வெறியுடன் போர்க்களம்முழுவரும் ஓடி எதிரிகளின் தலைகளை பனங்குலைகளை வெட்டித்தள்ளுவதைக்போல் வெட்டித்தள்ளி வீரம்-தீரம் காட்டிப்போராடியவர்கள் என்பதை புறநானூறு அகநானூறு போன்ற தமிழ் இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் தொல்காப்பியர். அவர் நம்குலமறவர்களாகிய வெட்சிமறவர் கள்வர்கள் போர்செய்த முறையையும் அவர்கள் போர்க்களம் சென்று வீரமரணம் அடைந்தபின் நடுகல்லாகி அனைவராலும் வணங்கப்பட்ட செய்திகள் பலவற்றையும் நேரில் கண்ட செய்திகளாக பன்னிருபடலத்தில் நமக்கு படம்பிடித்துக்காட்டுகிறார். தொல்காப்பியருக்குப்பின் இருநூறு ஆண்டுகளுக்குப்பின் வாழ்ந்தவர் திருவள்ளுவர்.அவரும் நம்மறக்குடி மக்களின் மாண்பையும் வீரத்தையும் நேரில்கண்டு போற்றிப்பாடியுள்ளார்