திருக்குறள்
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதான்
மெய்வருத்தக் கூலி தரும்.
- திருவள்ளுவர்
முதலில் கல்வி நிலையங்களை ஏற்படுத்துதல்:
நம்முடைய வெள்ளலூர் நாட்டு சொந்த மண்ணில் அனைத்து விதமான கல்வி
நிலையங்களை ஏற்படுத்த வேண்டும். அதாவது உதாரணமாக வெள்ளலூர்நாடு ஆரம்ப
பள்ளி, வெள்ளலூர்நாடு உயர்நிலை பள்ளி, வெள்ளலூர்நாடு மேல்நிலை
பள்ளி ஆகிய பள்ளி
கூடங்களையும், வெள்ளலூர்நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
வெள்ளலூர்நாடு தொழிற்நுட்ப மற்றும் பொறியியல் கல்லூரி, வெள்ளலூர்நாடு
பல்தொழிற்நுட்ப கல்லூரி, வெள்ளலூர்நாடு மருத்துவ கல்லூரி,
வெள்ளலூர்நாடு விவசாய ஆராய்ச்சி மையம் போன்ற கல்வி நிலையங்களை
வெள்ளலூர் நாட்டு மண்ணிலே ஏற்படுத்த வேண்டும்.
ஒருவர் LKG முதல் Phd வரை ஒரே இடத்திலே கல்வி கற்க வேண்டிய ஏற்பாடுகளை
பின்னாளில் வரும் சந்ததியினருக்கு ஏற்படுத்தி வைக்க வேண்டும். இதனால்
வெளியில் சென்று கல்வி கற்க ஆகும் செலவு குறைக்கப்படும்.
இரண்டாவதாக புத்தக நூலகங்களையும் இலக்க நூலகங்களையும் ஏற்படுத்துதல்:
புத்தக நூலகங்களையும் இலக்க நூலகங்களையும் நம் வெள்ளலூர் நாட்டு சொந்த
மண்ணில் ஏற்படுத்த வேண்டும்[ இப்பொழுதுநூலகம் சரியாக இல்லை ] கல்வி
அறிவுக்கு நூலகத்தின் பங்கு மகத்தானது.
இந்த செயல்முறை மிக முக்கியமானது, ஏனெனில் நூலகம் மிக
பெரிய மேதைகளை உருவாக்க வல்லது[ அவர்கள் இந்திய அளவிலோ அல்லது ஏன் உலக
அளவிலோ சாதிக்க கூடியவர்களாக கூட இருக்கலாம் ].
இலக்க நூலகம் என்பது பலவகைப்பட்ட இணையதளத்திலிருந்து கணிப்பொறி
உதவியுடன் தேவையான புத்தகங்களை பதிவிறக்கம் செய்து கணிணியிலேயே படிக்க
கூடியது.
மூன்றாவதாக தொழிற்சாலைகளையும் தொழிற்சங்கங்களையும் ஏற்படுத்துதல்:
மிக பெரிய அளவிலான தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் நம்
வெள்ளலூர் நாட்டு மக்களுக்கு [அனைவருக்கும்]வேலைவாய்ப்பு வழங்க
முடியும்.
> தொழிற்புரட்சி ஒரு நாட்டின் பொருளாதரத்தை உயர்த்தும். பொருளாதார உயர்வு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்.[ எந்த மாதிரியான தொழிற்சாலைகளை ஏற்படுத்தலாம் என்று கூட்டத்தின் (உறுப்பினர்கள் கூட்டம் ) மத்தியில் விவாதிக்கப்படும்.]
> தொழிற்சங்கங்கள் நம்முடைய உற்பத்தி பொருட்களை சந்தை படுத்திட மற்றும் நியாமான விலையில் பொருட்களை வாங்கவும் விற்கவும் வழிவகை செய்யும். இதன் மூலம் நம்முடைய பணங்கள் வீண் விரயம் ஆவது தடுக்கப்படும்.
it will be edited soon...
Copyright © vellalorenadu. All Rights Reserved.