வெள்ளலூர் நாட்டு மக்கள் முன்னேற உங்களின் கருத்துக்களை சொல்லவும்.

                                          வெள்ளலூர் நாட்டு மக்கள் முன்னேற உங்களின் கருத்துக்கள்:

வெள்ளலூர் நாட்டு மக்கள் முன்னேற உங்களின் கருத்துக்கள்:

       => உங்களின் மேலான கருத்துக்களை இங்கே கொடுக்குமாறு கேட்டு கொள்கின்றோம். அனைவரின் கருத்துக்களும் கலந்தாலோசிப்பதற்காக அவைகளை இந்த பக்கத்தில் வெளியிடுகின்றோம். தங்களின் பெயர் மற்றும் ஊர் ஆகியனவற்றை தெரிவித்தபிறகு தங்களின் கருத்துக்களை [ உதாரணமாக நாம் முதலில் நிதிக்கு இந்த வகையான செயல் முறைகளில் இறங்குவது சாலச்சிறந்தது ...] தெரிவித்து அனைவருக்கும் அறியும்படி செய்யவும்.


M Balu

M Balu

நம் வெள்ளலூர் நாட்டை இனைய தலத்தில் நுழைத்து அதற்கு ஒரு முகவரி கொடுத்த என் வெள்ளலூர் நட்டு இளைங்கர்களுக்கு என் நன்றி M பாலு கூட்டுரவுபட்டி

vellaichamy

vellaichamy

வெள்ளைசாமி வெள்ளலூரிலிருந்து...

நாம் முன்னேற , நமது அனாவசியமான செலவை குறைத்தல்,அதாவது.... நம்முடைய வெள்ளலூர் நாட்டில் இயங்கி வரும் அனைத்து மதுகடைகளையும் மூடுவதற்கு நாம் ஏற்பாடு செய்ய வேண்டும். அதாவது நம்முடைய இயக்கத்தில் உள்ள இளைஞர்கள் ஒவ்வொரு ஊரிலும் உள்ள மதுவை ஒழிக்க ஆர்வம் உள்ள பெரியோர்கள், இளைஞர்கள், குழந்தைகள், தாய்மார்கள் மற்றும் பெண்கள் ஆகியோரிடம் சென்று, மனு ஒன்றின்[ மதுகடைகளை வெள்ளலூர் நாட்டில் அமைக்க அனுமதிக்க மாட்டோம்] மீது ஆதரவை பெற்று, அதனை அந்தெந்த மாவட்ட ஆட்சியரிடம் அதனை சமர்ப்பிப்பதன் மூலம் இதனை செய்ய முடியும் என்பது எனது கருத்து.

தமிழ்செல்வம் சோனைபட்டி

தமிழ்செல்வம் சோனைபட்டி

எனது பார்வையில்....
இப்பொழுது நம்முடைய வெள்ளலூர் நாட்டை முன்னேற்ற தேவையான நிதியை பெற குறைந்த முதலீடான சுமார் மாதத்திற்கு 10000 அரிசி மூட்டைகளை [ 25 Kg] உற்பத்தி செய்யகூடிய ஒரு நெல் அரவை தொழிற்சாலையை ஏற்படுத்தலாம் என்று நினைக்கின்றேன். காரணம் இப்பொழுது யாரும் நெல் அரைத்து உணவு உண்ணுவதை விட நெல் மூட்டைகளை விற்று விட்டு அரிசி மூட்டைகளை வாங்கவே விரும்புகின்றார்கள். ஆகையினால் அத்தகைய ஆலைகளை வைத்திருப்பவர்கள் நெல் மூட்டைகளை அறுவடை காலத்தில் குறைந்த விலைக்கும் பின்னர் அதிகமான விலைக்கும்[ அறுவடை முடிந்து 6 மாதம் கழித்து] வாங்குகின்றார்கள். நாம் பணத்தேவையினால் அதனை அறுவடை காலத்திலேயே[ அதாவது குறைந்த விலைக்கு ] விற்று விடுகின்றோம். உதாரணமாக அறுவடை காலத்தில் 600 ரூபாயிக்கு வாங்கிய நெல் மூட்டை இப்பொழுது 1000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. அதேபோன்று 420 ரூபாய்க்கு விற்ற அரிசி மூட்டை இப்பொழுது 800 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. அவர்கள் மறுபடியும் அறுவடை காலத்தில் குறைத்தாலும் குறைக்கலாம்.

* indicates required field
(this will not be published on the website)
(must start with http:// or www.)
maximum characters 2500, 2500 remaining