“நீ வெற்றியாளனாய் பரிமளிக்க வேண்டுமானால் அடுத்தவர்கள் உன்னை நோக்கி எறியும் கற்களைக் கொண்டு வாழ்க்கையில் வலுவான அடித்தளம் கட்டிக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும் ” என்கிறார் டேவிட் பிரிங்க்லி. மண்வெட்டி பிடிக்கிற உழைப்பாளியோட கை ஆரம்பத்துல சிவந்து, அப்புறம் கிழிஞ்சு கடைசில பாறை மாதிரி உரமாயிடும். அதே போல அவமானங்களைச் சந்திக்கும் மனசும் உடைந்து விடாமல் அவமானங்களை திறமையாகச் சமாளித்தால் வலிமையாகி விடும். அப்படி ஒரு மனசு அமைந்து விட்டால் வாழ்க்கையின் எந்த சிகரத்திலும் கூடு கட்டிக் குடியிருக்கலாம.
=> இந்த பகுதியில் திறனாய்வு கேள்விகள் மற்றும் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஆப்பிள் பழங்கள் :
ஒரு இடத்திலிருந்து 2000 ஆப்பிள் பழங்களை ஆயிரம் கிலோ மீட்டர்
தொலைவிற்கு எடுத்து செல்ல ஒரு வாகனத்தை
பேசுகிறீர்கள், அவர்கள் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ஆப்பிள் பழத்தை வாகன
ஓட்டுனர் எடுத்து கொள்வார் என்று உங்களிடம் கூறுகிறார்கள்.
அப்படியானால், எத்தனை பழங்களை ஓட்டுனர் இலக்கில் கொண்டு போய்
சேர்த்திருப்பார் ?[ வாகனத்தின் அதிகபட்ச தாங்கும் எடை 1000 ஆப்பிள்
பழங்கள் மட்டுமே,அதாவது ஒரு தடவைக்கு 1000 ஆப்பிள் பழங்கள் மட்டும்
தான் ].
விடைக்கு அடுத்த பக்கம் சொடுக்க .......
ஆப்பிள் பழங்கள் :
500 ஆப்பிள் பழங்களை ஓட்டுனர் இலக்கில் கொண்டு போய்
சேர்த்திருப்பார்.
அதாவது முதலில் 1000 பழங்களை ஏற்றி கொண்டு 500 கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று அங்கு மீதி உள்ள பழங்களை இறக்கி விடுவார் [அதாவது 500 பழங்கள், 500 கிலோ மீட்டர் தொலைவிற்கு வந்ததால் அவருக்கு கமிசன் 500 பழங்கள் ], பின்பு அங்கிருந்து திரும்பி வந்து மீதம் உள்ள 1000 பழங்களை ஏற்றி செல்வார், அதுவும் 500 கிலோ மீட்டர் தொலைவை அடைந்ததும் ஏற்கனவே மீதம் உள்ள 500 பழங்களை ஏற்றி கொண்டு [ இப்பொழுது வாகனத்தில் 1000 பழங்கள் ] அங்கிருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை அடையும் போது 500 பழங்கள் இருக்கும்.
மின்விளக்குகள்:
ஒரு வீட்டின் முன்புறத்தில் (வெளிபகுதியில் ) மூன்று சுவிட்சுகள் உள்ளன.அந்த சுவிட்சுக்கான மின்விளக்குகள் வீட்டின் உள்ளே இணைக்கப்பட்டுள்ளன.[அறையின் கதவை திறக்காமல் வேறு எந்த முறையிலும் மின் விளக்குகள் எரிவதை நம்மால் காண இயலாது.]. மூன்று சுவிட்ச்சுக்கான மின் விளக்குகளின் இணைப்புகள் வரிசைபடியோ குறிப்பிட்ட வரிசையிலோ இருக்காது. அப்படி இருக்கும் போது நீங்கள் சுவிட்சை இயக்கிவிட்டு கதவை திறந்து மின் விளக்குகள் எரிவதை காண ஒரே ஒரு முறை மட்டும் அனுமதிக்கப்படுகிறீர்கள் எனில் எந்த சுவிட்சு எந்த மின் விளக்குடன் இணைக்க பட்டுள்ளது என்று உங்களால் சொல்ல முடியுமா ? [ எத்தனை முறை வேண்டுமானாலும் சுவிட்சை இயக்கலாம் ].
விடைக்கு அடுத்த பக்கம் சொடுக்க .......
மின் விளக்கு:
முதலில் ஒரு சுவிட்சை இயக்கிவிட்டு பின்பு அதனை சிறிது நீரம் கழித்து இயக்கத்தை நிறுத்தி விடுங்கள், பிறகு மற்றொரு சுவிட்சை இயக்கிவிட்டு கதவை திறந்து அறைக்குள் செல்லுங்கள் அங்கு இரண்டு மின் விளக்குகள் எரியாமல் இருக்கும், அவற்றில் ஓன்று மட்டும் இலேசாக சுடுவதை உணர்வீர்கள் அந்த மின் விளக்கு தான் முதலில் இயக்கப்பட்ட சுவிட்சுக்கானது. அவ்வளவு தான் விடை கிடைத்து விட்டது.
ஒரு வட்ட வடிவ கட்டிடத்தில் மூன்று
வேலைகாரர்கள் வேலை செய்து வந்தனர், அவர்களின் வேலையானது... அவர்களில்
ஒருவர் சமையல்காரர், இன்னொருவர் வீட்டை சுத்தம் செய்பவர், மற்றொருவர்
கார் ஓட்டுனர், ஒரு நாள் அவர்களின் முதலாளி கொலை செய்யப்பட்டு
கிடந்தார். மறுநாள் காலையில் அந்த முதலாளியின் மனைவியிடம் இந்த மூன்று
வேலைகாரர்களில் யார் மீது உங்களுக்கு சந்தேகம் உள்ளது என்று காவல்
துறை அதிகாரி கேட்டார். அதற்கு அந்த பெண் பதிலளிக்கவில்லை, ஆகையால்
விசாரணையை அவர்கள் மூன்று பேரின் மீது திருப்பினார். முதலில் சமையல்
காரரிடம் கொலை நடந்த சமையத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டு
இருந்தீர்கள் ? என்று காவல் துறை அதிகாரி கேட்டார். அதற்கு அவர் நான்
சமையல் செய்து கொண்டு இருந்தேன் என்றார். பிறகு வீட்டை சுத்தம்
செய்பவரிடம் கேட்க அவர் நான் வீட்டின் மூலையை கூட்டி கொண்டு
இருந்தேன் என்றார். கார் ஓட்டுனரோ நான் காரை துடைத்து கொண்டு
இருந்தேன் என்றார். காவல் துறை அதிகாரிக்கு தெரிந்து விட்டது இவர்
தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று .. யார் அந்த மனிதர்[ கொலைகாரர்
]... அவரை எப்படி கண்டுபிடித்தார் ?
விடை அடுத்த பக்கம்.
அதாவது வீட்டை சுத்தம் செய்பவர் தான் [ வட்ட வடிவமான வீட்டில் ஏது மூலை. வட்ட வடிவத்தில் மூலை கிடையாது. ]
ஒரு வீட்டில் ஜன்னல்கள், மேசை, நாற்காலிகள், ஆகியன என்று எதுவும் இல்லை, மேலே ஒரேஒரு மின்விசிறி பொறுத்த கம்பி மட்டும் உள்ளது. அதில் ஒருவர் உள்பக்கம் தளிட்டப்படி தூக்கில் தொங்கினார். அவர் எப்படி தூக்கில் தன்னை தானே மாட்டி கொண்டார். [ அவரோ ஐந்து அடி உயரம் வீட்டின் கம்பியோ பத்து அடி உயரத்தில் உள்ளது.] .[ உங்களுக்காக clue ஓன்று தருகிறோம் அவர் தூக்கில் கிடந்த இடத்தில் சிறிது அளவு தண்ணீர் மட்டும் உள்ளது.]
அதாவது அவர் ஒரு பனிக்கட்டியை கொண்டு தூக்கில் மாட்டிகொண்டார், பனிக்கட்டி கரைய கரைய அவருக்கும் தரைக்கும் உள்ள தொலைவு அதிகமானது.
/ * ஒவ்வொரு பகுதியிலும் பத்து கேள்விகள் மற்றும் அதற்கான பதில்கள் கொடுக்கபட்டுள்ளன. */
Here are the files to be useful:
Copyright © vellalorenadu-2012. All Rights are reserved.